தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக அடுத்தடுத்து அதிரடி ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் விஷால் அடுத்ததாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை நடிகர் விஷால் இயக்கி நடிக்கிறார்.

துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் தொடங்கும் என விஷால் அறிவித்திருந்த நிலையில், விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் S.J.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

முன்னதாக மீண்டும் காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்துள்ள திரைப்படம் லத்தி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என PAN INDIA திரைப்படமாக பல மொழிகளில் ரிலீஸாகவுள்ள லத்தி திரைப்படத்தை இயக்குனர் வினோத் குமார் இயக்கியுள்ளார். லத்தி திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். “எனது அன்பு இளவரசி தங்கை ஐஸ்வர்யாவுக்கு இன்று இளவரசி பிறந்துள்ளது” என குறிப்பிட்டு இந்த நற்செய்தியை விஷால் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Well wat more can I ask.
Supa happy to become an uncle again. The princess is born today to my princess darling sister aishu.
May god bless the new born girl and the couple.
Inshaallah. God bless. 🙏🙏🙏🙏

— Vishal (@VishalKOfficial) April 13, 2022