தமிழ் சினிமாவின் முன்னணி அதிரடி ஆக்ஷன் கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த வீரமே வாகை சூடும் மற்றும் லத்தி ஆகிய திரைப்படங்கள் பக்கா ஆக்சன் திரைப்படங்களாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதனைத் தொடர்ந்து விஷால் நடிப்பில் அடுத்தடுத்து அசத்தலான திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வகையில் முன்னதாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் இயக்குனர் செல்வராகவன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து முதல் முறை இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்க உள்ளார். துப்பறிவாளன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாராகும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் லண்டனில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இதுகுறித்து அறிவிப்புகளுக்காகவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த வரிசையில் அடுத்ததாக விஷால் தனது திரை பயணத்தில் 34 வது படமாக நடிக்கும் விஷால் 34 திரைப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளியானது. தமிழ் சினிமாவின் முன்னணி கமர்சியல் இயக்குனர்களில் ஒருவராக பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் ஹரி கடைசியாக இயக்கிய திரைப்படம் யானை. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற யானை திரைப்படத்திற்கு பிறகு தற்போது விஷாலுடன் விஷால் 34 திரைப்படத்தில் ஹரி இணைந்துள்ளார்.

முன்னதாக தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஷால் மற்றும் ஹரி கூட்டணியில் விஷால் 34 திரைப்படம் தயாராகிறது. விஷால் 34 திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் உடன் இணைந்து ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் இணைந்து தயாரிக்கின்றனர். ஹாட்ரிக் வெற்றிக்காக மீண்டும் இணைந்துள்ள விஷால் - ஹரி கூட்டணியில் பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமாக விஷால்34 திரைப்படம் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் விஷால் 34 படத்தின் இதர அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று ஏப்ரல் 23ஆம் தேதி விஷால் 34 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் விஷால் 34 பட பூஜை புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர் அந்த பூஜை புகைப்படங்கள் இதோ…

Super excited to join hands with Director Hari Sir for a 3rd time,

It’s going to be a blast and I am looking forward to it, GB#Vishal34

Produced by @stonebenchers and @ZeeStudiosSouth @kaarthekeyens @karthiksubbaraj pic.twitter.com/NpAjX1R9mt

— Vishal (@VishalKOfficial) April 23, 2023