ஆகச் சிறந்த நடிகராக படத்திற்கு படம் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் அபிமானம் பெற்ற கதாநாயகனாகவும் வலம் வரும் நடிகர் சூர்யா தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். கன்னியாகுமரியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். ஜல்லிக்கட்டை மையப்படுத்திய கதை களமான வாடிவாசல் திரைப்படத்தின் TEST SHOOT சமீபத்தில் சென்னையிலுள்ள ஈசிஆர்-ல் பிரத்யேகமான செட் அமைக்கப்பட்டு நடைபெற்றது.

நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த தயாரிப்பாளராகவும் நல்ல படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்துள்ள ஓ மை டாக் திரைப்படம் வருகிற ஏப்ரல் 21-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாக உள்ளது. இயக்குனர் சரோவ் சண்முகம் இயக்கியுள்ள ஓ மை டாக் படத்தில் அருண் விஜய், அவரது மகன் அர்னவ் மற்றும் அவரது தந்தை விஜயகுமார் ஆகிய மூவரும் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் மஹிமா நம்பியார் முக்கிய வேடத்தில் நடிக்க, வினய் வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில் இன்னும் சில தினங்களில் ரிலீஸாகவுள்ள ஓ மை டாக் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ள அர்னவ்-க்கு வாழ்த்துக்கள் கூறும் வகையில் தயாரிப்பாளர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா பேசும் புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த ப்ரோமோ வீடியோ இதோ…

Here is @Suriya_offl Sir and #Jyotika Mam's heartwarming wishes to #ArnavVijay ahead of #OhMyDog's release!

Watch #OhMyDogOnPrime, April 21 @PrimeVideoIN@arunvijayno1 @SarovShanmugam #VijayaKumar #ArnavVijay #VinayRai @rajsekarpandian #MahimaNambiar pic.twitter.com/4dEDPj66R9

— 2D Entertainment (@2D_ENTPVTLTD) April 18, 2022