எண்ணற்ற தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக வலம் வரும் அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வொஇமை திரைப்படம் மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது. இதனையடுத்து மீண்டும் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் #AK61 திரைப்படத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து 3வது முறையாக அஜித் குமார்-H.வினோத்-போனிகபூர்-நீரவ் ஷா கூட்டணியில் தயாராகி வரும் AK61 படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக முழுக்க முழுக்க வெள்ளை தலைமுடி தாடியோடு அஜித்குமார் இருக்கும் அட்டகாசமான கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அடுத்ததாக லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் புதிய #AK62 திரைப்படத்தில் அஜித் குமார் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். முன்னதாக ஐரோப்பிய நாடுகளில் தனது பைக் ரைடிங்கை முடித்த அஜித்குமார் சில சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார்.

இந்நிலையில் தற்போது திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் குமார் பங்கேற்று உள்ளார். திருச்சி ரைஃபிள் கிளப்பில் நடைபெற்று வரும் இந்த துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு அஜித்குமார் துப்பாக்கி சுடும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோக்கள் இதோ…

AK #AjithKumar Video 🤩🤩🤩 #AK61 pic.twitter.com/bn63w1kXrE

— AK FANS COMMUNITY™ (@TFC_mass) July 27, 2022

Exclusive Vidoe Of Our #AK #AjithKumar At Trichy Rifle Club 🔥😎❤️

All The Best Chief 👍👍👍🤩🤩#AK61 pic.twitter.com/FVj2riHWFA

— AK FANS COMMUNITY™ (@TFC_mass) July 27, 2022

Latest Video Of #AjithKumar Sir At Trichy Rifle Club 🔫❤️💥.#AK61 | #AK62 pic.twitter.com/20lppvFkB3

— KERALA AJITH FANS CLUB (@KeralaAjithFc) July 27, 2022