மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தி நடித்த கைதி படத்தினை இயக்கினார்.

இந்த படமும் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றது.வளர்ந்து வரும் முன்னணி இளம் இயக்குனர்களில் ஒருவராக தவிர்க்க முடியாத ஒரு இடத்தினை பிடித்தார் லோகேஷ்.அடுத்ததாக தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தினை இயக்கினார்.இந்த படமும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்தார் லோகேஷ்.

மாஸ்டர் படத்திற்கு அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தினை இயக்கவுள்ளார் லோகேஷ்.ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.ஃபஹத் பாசில்,விஜய்சேதுபதி,நரைன்,அர்ஜுன் தாஸ்,காளிதாஸ் ஜெயராம்,பிக்பாஸ் ஷிவானி,மைனா,மஹேஸ்வரி VJ உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படம் ஜூன் 3ஆம் தேதி பிரம்மாண்டமாக 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் வரும் மே 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தின் முதல் பாடல் மே 11ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தனர்.தற்போது பத்தல பத்தல என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை கமல்ஹாசன் எழுதி பாடியுள்ளார் என்பதை சில புகைப்படங்களுடன் அனிருத் மற்றும் லோகேஷ் பகிர்ந்துள்ளனர்.

Ulaganayagan @ikamalhaasan sir writes and sings #PathalaPathala 🥳🥳🥳 What a session! Thank you sir 😃😃😃#Vikram first single from May 11th day after 🥁🥁🥁 @Dir_Lokesh ❤️❤️❤️ @RKFI pic.twitter.com/JU1qRchWSj

— Anirudh Ravichander (@anirudhofficial) May 9, 2022

Andavar Swag on MAY 11th 🔥#VikramFirstSingle #Vikram pic.twitter.com/ahNcxunPZq

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) May 9, 2022