பிரபல தொகுப்பாளராக மீடியாவிற்குள் என்ட்ரி கொடுத்தவர் ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்.மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் வெளியான Half Boil வெப் சீரிஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் ஸ்வாதிஷ்டா.இந்த தொடரில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெரிதாக ஈர்க்கத்தொடங்கினார் ஸ்வாதிஷ்டா.

இளைஞர்கள் இவரை இன்ஸ்டாவில் பின்தொடர இவரது புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்தன.வெகு விரைவில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார் ஸ்வாதிஷ்டா.சவரகத்தி,கீ உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தும் அசத்தியுள்ளார் ஸ்வாதிஷ்டா.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றியடைந்த விக்ரம் படத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.படம் வெளியான பின் பலரது பாராட்டுகளையும் அள்ளி வருகிறார் ஸ்வாதிஷ்டா.அடுத்தடுத்து சில படங்களில் நடிப்பார் என்று தெரிகிறது.

சமூகவலைத்தளங்களில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து வருவார்.தற்போது ட்விட்டரில் தனது பெயரில் தன்னை போலவே சிலர் Fake IDகளை Create செய்து பதிவுகளை பகிர்ந்து வருவதாகவும் அவர்களிடம் உஷாராக இருக்கவேண்டும் என்றும் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.