தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்திகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படம் தளபதி 66.

தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி பைடிபைலி இந்த படத்தினை இயக்குகிறார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சரத்குமார் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் சில நாட்களுக்கு முன் தொடங்கியது.

பாடல் ஷூட்டிங்குடன் இந்த படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது.அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்காக செட் வேலைகள் நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் பாடல் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.அந்த மியூசிக் வேளைகளில் இருந்து தமன் மற்றும் வம்சி ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Thaman Shivakumar Ghantasala (@musicthaman)