தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டில் வரிசையாக அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான், கத்ரீனா கைப் உடன் இணைந்து மேரி கிறிஸ்மஸ், மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக தயாராகும் மும்பைக்கர் உள்ளிட்ட ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரியுடன் இணைந்து விடுதலை திரைப்படத்தில் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த இடம் பொருள் ஏவல் திரைப்படம் நீண்டகாலமாக ரிலீஸுக்காக காத்திருந்தது.

இந்நிலையில் இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளதாக, தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
“அன்புடையீர் வணக்கம்.
எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவு தரும் மதிப்பும் மரியாதைக்குரிய அன்பு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றியும் திபாவளி வாழ்த்துக்களும் தெரிவித்து கொள்கிறோம். இயக்குனர் திரு N.லிங்குசாமி வழங்க திருப்பதி பிரதர்ஸ் சார்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் திரு சீனு.ராமசாமி அவர்களின் இயக்கத்தில், சாகித்ய அகாடமி விருது பெற்ற திரு.எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் கதையில் "இடம் பொருள் ஏவல்" என்ற திரைப்படத்தினை தயாரித்து இருக்கிறோம். இப்படத்தில் மக்கள் செல்வன் திரு.விஜய் சேதுபதி அவர்களும், நம்பிக்கை நாயகன் திரு விஷ்ணு விஷால் அவர்களும். ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா மற்றும் வடிவுக்கரசி அவர்களும் நடித்திருக்கின்றனர்.

கவிப்பேரரசு திரு.வைரமுத்து அவர்களின் பாடல்களுக்கு முதல் முறையாக திரு. யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைத்திருக்கிறார். "இடம் பொருள் ஏவல்" திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகையால் இப்படத்தை மிக விரைவில் வெளியிட தயாராக உள்ளோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.”
என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே விரைவில் ரிலீஸ் தேதி மற்றும் இதர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#idamporulyaeval #Ipy @seenuramasamy @VijaySethuOffl @TheVishnuVishal @aishu_dil @Nanditasweta @dirlingusamy @thisisysr @itisbose pic.twitter.com/nk2AKjG0UA

— Thirrupathi Brothers (@ThirrupathiBros) October 20, 2022