தமிழ் சினிமாவின் ஜனரஞ்சகமான கதாநாயகர்களில் ஒருவரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடிப்பவர். தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான மறைந்த இயக்குனர் S.P.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த லாபம் திரைப்படம் வருகிற 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் டாப்சி இணைந்து நடித்துள்ள அனபெல் சேதுபதி திரைப்படம் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகிறது.

அடுத்ததாக விஜய்சேதுபதியின் அரசியல் படமாக வெளியாகிறது துக்ளக் தர்பார். விஜய் சேதுபதியுடன் இணைந்து இயக்குனர் பார்த்திபன் சத்யராஜ் மஞ்சிமா மோகன் ராஷி கண்ணா கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் வெளியாகும் துக்ளக் தர்பார் திரைப்படத்தை செவன் க்ரீன் ஸ்டூடியோ சார்பில் தயாரிப்பாளர் S.S.லலித் குமார் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

முன்னதாக வெளியான படத்தின் டீசர் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் துக்ளக் தர்பார் படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. துக்ளக் தர்பார் திரைப்படம் சன் டிவியில் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது. தொடர்ந்து நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் செப்டம்பர் 11 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

#TughlaqDurbar World Satellite Premiere on @SunTV - 10th SEP 6.30 PM.#TughlaqDurbar Available on @NetflixIndia from 11th SEP 12.00 AM @DDeenadayaln @rparthiepan @7screenstudio @RaashiiKhanna_ @mohan_manjima @manojdft @samyuktha_shan @proyuvraaj pic.twitter.com/leoCuip1at

— VijaySethupathi (@VijaySethuOffl) September 2, 2021