ஹீரோ-வில்லன் எனும் பாகுபாடு இல்லாமல் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ள மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருக்கும் விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் மாமனிதன் திரைப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. மேலும் மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக தயாராகயிருக்கும் மும்பைக்கர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப் உடன் இணைந்து மேரி கிறிஸ்மஸ் எனும் பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

தொடர்ந்து ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்கள் இயக்கத்தில் தயாராகி விரைவில் அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ள ஃபர்ஸி வெப் சீரிஸில் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மைக்கேல்.

சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்கும் மைக்கேல் படத்தில் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், வரலக்ஷ்மி சரத்குமார், திவ்யான்ஷா கௌஷிக் மற்றும் வருண் சந்தேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மைக்கேல் படத்திற்கு சாம்.CS இசையமைத்துள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் கரண் C ப்ரொடக்சன் இணைந்து தயாரிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வழங்கும் மைக்கல் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் மைக்கல் படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…

Happy to be associated with this fabulous project! #Michael 🔥 Happy Birthday machi @sundeepkishan congratulations @jeranjit bro @VijaySethuOffl anna @SamCSmusic & Team🔥 pic.twitter.com/3iBLF2cedm

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) May 7, 2022