போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்கும் முனைப்போடு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தமிழ்நாடு மாநில குழு முன்னெடுத்துள்ள ஒரு கோடி கையெழுத்து இயக்கம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்த கையெழுத்து இயக்கத்தை அன்பு தலைவர் தோழர் சங்கர்ய்யா அவர்கள் முதல் கையெழுத்து இட்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும் இந்த இயக்கத்திற்கு ஆதரவுகள் பெருகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் அனைவரும் இந்த இயக்கத்திற்கு தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட M.சசிகுமார், இயக்குனர் வெற்றிமாறன், பாடகர்ஏ.ஆர் ரெஹைன்னா, பிக் பாஸ் போட்டியாளரும் சமூக சிந்தனையாளருமான விக்ரமன், இயக்குனர் சேரன், இன்று நேற்று நாளை அயலான் திரைப்படங்களின் இயக்குனர் R.ரவிக்குமார், இயக்குனர் H.வினோத் பத்திரிக்கையாளரும் இயக்குனருமான ராஜமுருகன் ஆகியோர் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்திற்கு தங்களது ஆதரவை கொடுத்தனர்.

இந்த வரிசையில் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் மாரி செல்வராஜ், அதர்வா, ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை ரோகிணி ஆகியோரும் இணைந்துள்ளனர். போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்குவதற்காகவும் போதைக்கு எதிராகவும் கையெழுத்து இயக்கத்தில் இணைந்திருக்கும் இந்த நட்சத்திரங்களுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதை நம் அனைவரின் கடமை என உணர்த்தும் வகையில் திரை நட்சத்திரங்கள் அனைவரும் இதில் தங்களது ஆதரவை கொடுத்து வரும் நிலையில், தமிழக மக்கள் அனைவரும் இதில் ஆதரவு கொடுத்து இந்த ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என கலாட்டா குழுமம் பொது மக்களை வேண்டிக் கொள்கிறது.

போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து DYFI நடத்தும் ஒரு கோடி கையெழுத்து திரைக்கலைஞர் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் கையெழுத்திட்டார். @aishu_dil#போதையற்றதமிழ்நாடு #ஒருகோடிகையெழுத்து pic.twitter.com/FRbtvom8ac

— DYFI Tamil Nadu (@DyfiNadu) February 18, 2023

போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து DYFI நடத்தும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் திரை இயக்குநர் மாரிசெல்வராஜ், பாடலாசிரியர்கள் யுகபாரதி , வெய்யில் ஆகியோர் கையெழுத்திட்டனர். @YugabhaarathiYb@mari_selvaraj#போதையற்றதமிழ்நாடு#ஒருகோடிகையெழுத்து#NoToDrugs#DYFITAMILNADU pic.twitter.com/50OddV5NMH

— DYFI Tamil Nadu (@DyfiNadu) February 18, 2023