தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி தற்போது இந்திய திரை உலகின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மொழிகளைக் கடந்து மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்களின் இயக்கத்தில் புதிய ஹிந்தி வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார்.

தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசனுடன் இணைந்து விக்ரம் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் நடிப்பில், தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல், இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை, இயக்குனர் சீனு ராமசாமியின் மாமனிதன், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் வரிசையாக தயாராகி வருகின்றனர்.

முன்னதாக மலையாளத்தில் 19(1)(a) மற்றும் காந்தி டாக்ஸ் இன்னும் மௌனத்தை படமும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவர உள்ளன. இதனிடையே இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ட்ரைபல் ஆர்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள கடைசி விவசாயி படத்தில் நல்லாண்டி விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ரிச்சர்ட் ஹார்வி இணைந்து இசை அமைத்துள்ள கடைசி விவசாயி படத்தை இயக்குனர் மணிகண்டன் ஒளிப்பதிவும் செய்துள்ளார். இந்நிலையில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த கடைசி விவசாயி திரைப்படம் 7C's எண்டர்டெயின்மெண்ட் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் இணைந்து வழங்க வருகிற பிப்ரவரி 11ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#KadaisiVivasayi will hit the screens on Feb 11th.#KadaisiVivasayiFromFeb11 @dirmmanikandan @vsp_productions #TribalArtsProduction #ArtistsCoupe #RichardHarvey @Music_Santhosh @7CsPvtPte @iYogiBabu @proyuvraaj @Raichalrabecca @Aravindh_dir @r_kumarshivaji @cineinnovations pic.twitter.com/uHomxBbno0

— VijaySethupathi (@VijaySethuOffl) January 30, 2022