படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து பல விதமான கதாபாத்திரங்களில் ரசிகர்களுக்கு வெரைட்டி விருந்து வைக்கும் நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவை தாண்டி தற்போது இந்தியிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.

முன்னதாக ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய வெப்சீரிஸில் நடித்துள்ள விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் உடன் இணைந்து மேரி கிறிஸ்மஸ் எனும் ஹிந்தி படத்திலும் மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக தயாராகியுள்ள மும்பைகர் படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த வரிசையில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன். YSR புரோடக்சன் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள மாமனிதன் படத்திற்கு இசைஞானி இளையராஜா , யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.

ஸ்டுடியோ 9 நிறுவனம் வெளியிட வருகிற மே 20-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் மாமனிதன் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து வரிசையாக விஜய்சேதுபதியின் திரைப்படங்கள் ரிலீஸாகும் காரணத்தினாலும் மாமனிதன் திரைப்படத்திற்கு குறைந்தது 400 திரையரங்குகள் வேண்டும் என்ற காரணத்தினாலும் வருகிற ஜூன் 24ஆம் தேதி மாமனிதன் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Due to continue @VijaySethuOffl movie releases studio9 have changed the release date of mamanithan from may 20 th to June 24 . Mamanithan deserves to hold minimum 400 theatres all over tamilnadu . Our sincere apologies to all theatre owners and distributor. @seenuramasamy pic.twitter.com/3iYeRmmHKk

— RK SURESH (@studio9_suresh) April 21, 2022