சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், ஒநாயும் ஆட்டுக்குட்டியும், முகமூடி, பிசாசு, துப்பரிவாளன், சைக்கோ என தனக்கே உரித்தான பாணியில் சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் பிசாசு 2.

ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிசாசு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படத்தில் ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, மிக முக்கிய வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

மேலும் நடிகை பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் பிசாசு 2 திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் ரிலீசாகவுள்ளது.

முன்னதாக சமீபத்தில் வெளிவந்த பிசாசு 2 திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது பிசாசு 2 படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி பிசாசு 2 திரைப்படத்தின் டப்பிங்கை நிறைவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Our #John @VijaySethuOffl completed his Dubbing for @DirectorMysskin's magnum opus #Pisasu2 #Pisachi2 #Pishaachi2 #Pishaachi2@andrea_jeremiah @Lv_Sri @actor_ajmal @shamna_kkasim @Actorsanthosh @kbsriram16 @APVMaran @saregamasouth @teamaimpr pic.twitter.com/H5DwFIHfRd

— RockFort Entertainment (@Rockfortent) May 25, 2022