மாஸ்டர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய்யின் அடுத்த பிளாக்பஸ்டர் திரைப்படமாக ரிலீஸாகவுள்ளது பீஸ்ட் திரைப்படம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படத்தை கோலமாவு கோகிலா & டாக்டர் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார்.

பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க, செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, யோகிபாபு, அபர்ணா தாஸ், சதீஷ் கிருஷ்ணன், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் R.நிர்மல் படத்தொகுப்பு செய்துள்ள பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

நேற்று (மார்ச் 19ஆம் தேதி) பீஸ்ட் திரைப்படத்திலிருந்து 2-வது பாடலாக தளபதி விஜய் பாடி வெளிவந்த ஜாலியோ ஜிம்கானா பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதி வெளிவந்த அரபிக் குத்து பாடல் தொடர்ந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

வருகிற ஏப்ரல் மாதம் பீஸ்ட் திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ள நிலையில் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே வெளியான 2 பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக அரபிக் குத்து பாடலுக்கு நடிகைகள் சமந்தா, பூஜா ஹெக்டே, கீர்த்தி சுரேஷ், பாடகி ஜொனிதா காந்தி & இசையமைப்பாளர் அனிருத் உட்பட பல முன்னணி பிரபலங்களும் நடனமாடிய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்கள் வைரலாகியுள்ளன.

இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் அரபிக் குத்து பாடல் தற்போது யூடியூபில் 200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. முன்னதாக நடிகர் தனுஷின் ரவுடி பேபி பாடல் 42 நாட்களில் 200 மில்லியன் சாதனையை செய்த நிலையில் தற்போது அரபிக் குத்து பாடல் 33 நாட்களில் சாதனையைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யின் அட்டகாசமான அரபிக் குத்து பாடல் இதோ…

Smashing the internet with the viral hit #HalamithiHabibo 🔥
Massive 200M+ views in data-style ❤

📹 https://t.co/ZvW8cZdeXf
🎵 https://t.co/7Sjf9VwvFQ@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @Siva_Kartikeyan @jonitamusic @manojdft @AlwaysJani @Nirmalcuts #Beast pic.twitter.com/FJhkSvsDel

— Sun Pictures (@sunpictures) March 20, 2022