இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக தென்னிந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் சக்கரவர்த்தியாக விளங்கும் தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அறிவிப்புகள் அடுத்த சில தினங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பக்கா ஃபேமிலி என்டர்டெய்னர் படமாக வெளிவந்துள்ள வாரிசு படத்தை குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே தளபதி விஜயின் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள அரபிக் குத்து பாடல் யூட்யூபில் புதிய சாதனை படைத்துள்ளது. இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு வெளியீடாக ரிலீஸ் ஆனது.இதில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளிவந்த அரபிக் குத்துப் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வேற லெவல் ஹிட்டடித்தது.

இந்நிலையில் தற்போது அரபிக் குத்து பாடலின் லிரிக் வீடியோ 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூட்யூபில் சாதனை படைத்துள்ளது. முன்னதாக தனுஷின் ரவுடி பேபி பாடல் 500 மில்லியன் எனும் இமாலய சாதனையை கடந்த நிலையில், தற்போது அரபிக் குத்து பாடலின் லிரிக் வீடியோவும் 500 மில்லியனை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அறிவிக்கும் வகையில் இதுவரை வெளிவராத காட்சிகளுடன் அரபிக் குத்து பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியானது. அந்த வீடியோ இதோ…