தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான Dear Comrade படம் அனைத்து தரப்பினரிடையும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் ஹீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஹீரோ படத்தினை ஆனந்த் அண்ணாமலை இயக்குகிறார்.மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இதனை தொடர்ந்து இவர் கிராந்த்தி மாதவ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் தொடங்கியது.

இந்த படத்தில் ராஷி கண்ணா,ஐஸ்வர்யா ராஜேஷ்,கேத்ரின் தெரசா,இசபெல்லே லெய்ட் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.தற்போது இந்த படத்திற்கு வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் Firstlook வரும் செப்டம்பர் 20 அன்று வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.