தென்னிந்திய சினிமாவின் சென்சேஷனல் நடிகராக மாறியுள்ளவர் விஜய் தேவர்கொண்டா.அர்ஜுன் ரெட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகராக மாறினார்,குறிப்பாக பெண்களின் மனம் கவர்ந்த கனவு கண்ணனாக மாறினார் விஜய் தேவர்கொண்டா.பெண்கள் மட்டுமின்றி பல இளைஞர்களின் மனதிலும் மாஸ் ஹீரோவாக உருவெடுத்தார் விஜய் தேவர்கொண்டா.

இதனை தொடர்ந்து இவர் நடித்த கீதா கோவிந்தம்,டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களும் தென்னிந்திய அளவில் பெரிய ஹிட் அடித்தது..விஜய் தேவர்கொண்டா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வேர்ல்ட் பேமஸ் லவ்வர்.இந்த படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து இவர் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கும் Liger படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தினை பூரி ஜெகன்நாத்,சார்மீ,கரண் ஜோகர் உள்ளிட்டோர் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படம் ஆகஸ்ட் 25 2022-ல் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது விஜய் தேவர்கொண்டா நடிக்கும் அடுத்த பத்தினையும் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.லிகர் படத்தினை போலவே பேன் இந்தியா படமாக இந்த படமும் உருவாகவுள்ளது.பூரி ஜெகன்னாத்,சார்மீ,இயக்குனர் வம்சி உள்ளிட்டோர் இணைந்து இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.இந்த படத்திற்கு JGM ஜனகனமன என பெயரிடப்பட்டுள்ளது.இதன் அறிவிப்பு போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

And then they chose-
All out WAR!

A passion project of gigantic scale,content & execution!

The 2nd Pan-Indian collaboration of the Deadly Combo Puri Jagannadh& @TheDeverakonda#JGM

💰@Charmmeofficial @PuriConnects @directorvamshi #SrikaraStudios #PuriJagannadh

AUG 3rd,2023✌️ pic.twitter.com/j06U6ijqQx

— Charmme Kaur (@Charmmeofficial) March 29, 2022

#JGM Motion Poster. pic.twitter.com/XRo6zsEkIy

— Vijay Deverakonda (@TheDeverakonda) March 29, 2022