தென்னிந்திய சினிமாவின் சென்சேஷனல் நடிகராக மாறியுள்ளவர் விஜய் தேவர்கொண்டா.அர்ஜுன் ரெட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகராக மாறினார்,குறிப்பாக பெண்களின் மனம் கவர்ந்த கனவு கண்ணனாக மாறினார் விஜய் தேவர்கொண்டா.பெண்கள் மட்டுமின்றி பல இளைஞர்களின் மனதிலும் மாஸ் ஹீரோவாக உருவெடுத்தார் விஜய் தேவர்கொண்டா.

இதனை தொடர்ந்து இவர் நடித்த கீதா கோவிந்தம்,டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களும் தென்னிந்திய அளவில் பெரிய ஹிட் அடித்தது..விஜய் தேவர்கொண்டா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

அடுத்ததாக இவர் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கும் Liger படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தினை பூரி ஜெகன்நாத்,சார்மீ,கரண் ஜோகர் உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர்.இந்த படத்தில் அனன்யா பாண்டே,ரம்யா கிருஷ்ணன்,ரோனித் ராய்,குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் ஆகஸ்ட் 25 2022-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் தீம் பாடல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளிவர உள்ளன என ஒரு புது போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.படத்தின் அப்டேட் என்ன என்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

A Film that took my everything.
As a performance, Mentally, physically my most challenging role.

I give you everything!
Coming Soon#LIGER pic.twitter.com/ljyhK7b1e1

— Vijay Deverakonda (@TheDeverakonda) July 2, 2022