தென்னிந்திய சினிமாவின் சென்சேஷனல் நடிகராக மாறியுள்ளவர் விஜய் தேவர்கொண்டா.அர்ஜுன் ரெட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகராக மாறினார்,குறிப்பாக பெண்களின் மனம் கவர்ந்த கனவு கண்ணனாக மாறினார் விஜய் தேவர்கொண்டா.பெண்கள் மட்டுமின்றி பல இளைஞர்களின் மனதிலும் மாஸ் ஹீரோவாக உருவெடுத்தார் விஜய் தேவர்கொண்டா.

இதனை தொடர்ந்து இவர் நடித்த கீதா கோவிந்தம்,டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களும் தென்னிந்திய அளவில் பெரிய ஹிட் அடித்தது..விஜய் தேவர்கொண்டா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வேர்ல்ட் பேமஸ் லவ்வர்.இந்த படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து இவர் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தினை பூரி ஜெகன்நாத்,சார்மீ,கரண் ஜோகர் உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர்.இந்த படத்தில் அனன்யா பாண்டே,ரம்யா கிருஷ்ணன்,ரோனித் ராய்,குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Liger என்று பெயரிடப்பட்டுள்ள பிரம்மாண்டமாக பன்மொழிகளில் ஆகஸ்ட் 25 2022-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் சிலவற்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Focus and Attack !!!💥👊🏻

Here are the Exclusive BTS Stills of #LIGER🦁🔀🐯#LigerFirstGlimpse Explodes🌋
On DEC 31st @ 10:03AM ⏰@TheDeverakonda @MikeTyson #PuriJagannadh @ananyapandayy @karanjohar @Charmmeofficial @apoorvamehta18 @DharmaMovies @PuriConnects @sonymusicindia pic.twitter.com/TKEHIGDqMu

— Puri Connects (@PuriConnects) December 30, 2021