தெலுங்கு சினிமா ரசிகர்களின் ஃபேவரா ஹீரோவாக முன்னணி கதாநாயகராக வலம்வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா அடுத்ததாக போக்கிரி & பிசினஸ்மேன் என மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில்லைகர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் தயாராகி, இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரிலீசாகவுள்ள லைகர் படத்தை நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகநாத் அவர்களின் பூரி கனெக்ட்ஸ் மற்றும் தர்மா புரோடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க,யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் வழங்குகிறது. லைகர் திரைப்படத்தின் பாடல்களுக்கு தனிஷ்க் பக்ச்சி இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் மணிஷர்மா பின்னணி இசை சேர்க்கிறார்.

குத்து சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அனன்யா பாண்டே நடித்து வரும் லைகர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, லைகர் திரைப்படத்தின் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் நடிக்கிறார்.

சமீபத்தில் அமெரிக்காவில் மைக் டைசன் மற்றும் விஜய்தேவரகொண்டா இடையிலான சண்டை காட்சிகள் அடங்கிய படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது லைகர் படக்குழு அமெரிக்கா படப்பிடிப்பை தற்போது நிறைவு செய்துள்ளது.விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் தொடங்கவுள்ள நிலையில் அமெரிக்கா படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழுவினர் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் இதோ...

Amazing hosting you guys for the wrap-up party at one of the most prominent restaurants, ‘Catch’!

Best schedule & delicious Food 🥰#Liger@MikeTyson #KikiTyson @TheDeverakonda #PuriJagannadh @karanjohar @ananyapandayy @apoorvamehta18 @DharmaMovies @PuriConnects @IamVishuReddy pic.twitter.com/6HyokegSZK

— Charmme Kaur (@Charmmeofficial) November 30, 2021