அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் பிகில்.ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.நயன்தாரா,கதிர்.இந்துஜா,யோகிபாபு,விவேக் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது.இந்த இசை வெளியீட்டு விழாவில் முக்கிய படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

நிகழிச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விஜயுடன் இணைந்து வேலைசெய்ய 6 வருடங்கள் காத்திருந்தோம்.இந்த படம் எங்களுக்கு மிக முக்கியமான ஒரு படம் என்று தெரிவித்துள்ளார்.விஜய் எங்கள் கஷ்டத்தை உணர்ந்து நிறைய நேரம் இருந்து வேலையை முடித்தது கொடுத்து விட்டு செல்வார்.வரலாற்று படங்களுக்கு பாகுபலி எப்படி மைல்கல்லாக அமைந்ததோ அதனை போல் பிகில் விளையாட்டு படங்களுக்கு இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.