இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பாடகர் நடிகர் தயாரிப்பாளர் படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் விஜய் ஆண்டனி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம் அடுத்த வாரம் வருகிற மே 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் வெளிவந்த ட்ரெயலர் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், விஜய் ஆண்டனியின் முதல் PAN படமாக இந்தியாவின் ஐந்து முன்னணி மொழிகளில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. இந்த நிலையில், நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி தனது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அப்படி பேசுகையில், “பிச்சைக்காரன் 2 திரைப்படம் தான் உங்களுடைய முதல் PAN INDIA படம்… இந்த படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் மற்றும் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் கழித்து ஹிந்திலும் ரிலீஸ் ஆகிறது... இதை எப்படி பார்க்கிறீர்கள்?” என கேட்டபோது,

“இதில் எனக்கு ஒன்றுமே இல்லை... என்னுடைய பழைய படங்கள் எல்லாமே தெலுங்கிலும் டப்பிங் ஆகும். பின்பு நம்மளுடைய சாட்டிலைட் உரிமத்தை ஹாட்ஸ்டார் - விஜய் டிவிக்கு கொடுத்திருக்கிறோம். தென்னிந்திய மொழிகளை டப் செய்து கொடுங்கள் என்று சொல்கிறார்கள். எனவே அதற்காக டப்பிங் செய்கிறேன். அதை கொஞ்சம் சீக்கிரமாக செய்தால் அந்தந்த மொழிகளில் திரையரங்குகளிலேயே ரிலீஸ் செய்யலாம் என முயற்சி செய்கிறேன். ஆந்திராவில் எனக்கு தெரிந்து 700 திரையரங்குகளில் பிச்சைக்காரன் 2 ரிலீஸ் ஆகிறது. தமிழுக்கு இணையாக தெலுங்கிலும் ரிலீஸாக உள்ளது. கன்னடம் மற்றும் மலையாளம் கொஞ்சம் புதுசு தான். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், “நாங்கள் தமிழிலேயே பார்க்கிறோம் நீங்கள் ஏன் டப் செய்கிறீர்கள்” என கேட்கிறார்கள். இருந்தாலும் நீங்கள் பாருங்கள் என ஒரு OPTIONஆக நான் கொடுக்கிறேன். கன்னடம் மற்றும் மலையாளத்தில் அந்த டப் செய்த மொழிகளில் 50 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. ஹிந்தி தான் ஒரு பெரிய சேலஞ்சாக இருக்கிறது. என்னுடைய கோடியில் ஒருவன் படம் எல்லாம் ஹிந்தியில் டப்பிங் செய்து கொடுத்தது சேனல்களில் எல்லாம் நன்றாக போனது. Youtubeல எல்லாம் நிறைய பாஸிட்டிவ் விமர்சனங்கள் பார்க்கிறேன். கமெண்ட்களையும் படித்து பார்த்திருக்கிறேன். இப்போது PAN INDIA-வாக ஆகிவிட்டது சார். நீங்கள் சாதாரணமாக ஒரு படத்தை சேனலுக்கு கொடுத்தாலும் அவர்கள் அதை பிற மொழிகளில் டப்பிங் செய்து போடுகிறார்கள். அதை கொஞ்சம் முன்கூட்டியே செய்கிறோம். ஒரு வாரம் - 15 நாட்கள் முன்கூட்டியே செய்கிறோம் என்பது தான் ஒரு விஷயமே, தவிர்த்து இதே கன்டன்ட்டை ஒரே மாதிரி மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன்.”

என பதில் அளித்துள்ளார். விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 ஸ்பெஷல் கலாட்டா ப்ளஸ் முழு பேட்டியை கீழே உள்ளலிங்கில் காணலாம்.