இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் தனது பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி தற்போது நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருகிறார். மேலும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார் விஜய் ஆண்டனி.

தொடர்ந்து நடிகராக அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழரசன், அக்னிசிறகுகள் & காக்கி உள்ளிட்ட திரைப்படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக தயாராகிவரும் கொலை மற்றும் தமிழ் படம் பட இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் ரத்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான S.D.விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். இன்ஃபினிட்டி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், முரளி சர்மா, தனஞ்ஜெயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், முரளி சர்மா & தனஞ்ஜெயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ள மழை பிடிக்காத மனிதன் படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்க பிரவீன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்நிலையில் மழை பிடிக்காத மனிதன் படத்தின் அசத்தலான டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த போஸ்டர் இதோ...


Happy to share #MazhaiPidikathaManithan #MPM #மழைபிடிக்காதமனிதன் Title Look. Looking very good 👍😇

Best wishes
🎬 @vijaymilton@vijayantony @r_sarath_kumar @meghaakash #SaranyaPonvannan @sharma_murli @dhananjaya_ka @pruthvi_ambaar_official
@infinitifilmventures @ctcmediaboy pic.twitter.com/kWEjvv3FP5

— Arya (@arya_offl) February 14, 2022