தனது திரைப்படத்திலேயே முதல்முறையாக வித்தியாசமான த்ரில்லர் படமாக விஜய் ஆண்டனி நடித்திருக்கும் கொலை திரைப்படத்தின் பிரத்தியேக மேக்கிங் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளனர். இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக திகழும் விஜய் ஆண்டனி அவர்கள் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். முன்னதாக ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்திருக்கும் மழை பிடிக்காத மனிதன், தமிழ் படம் படத்தின் இயக்குனர் CS.அமுதன் அவர்களின் இயக்கத்தில் வித்தியாசமான பொலிடிகல் திரில்லர் திரைப்படமாக நடித்திருக்கும் ரத்தம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து விஜய் ஆண்டனி நபிப்பில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வள்ளி மயில் எனும் திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் விஜய் ஆண்டனி மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உருவான ஆக்ஷன் திரைப்படமான அக்னி சிறகுகள் திரைப்படம் நீண்ட காலமாக ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. இதனிடையே விடியும் முன் படத்தின் இயக்குனர் பாலாஜி கே குமார் இயக்கத்தில் க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக விஜய் ஆண்டனி நடித்திருக்கும் திரைப்படம் தான் கொலை. முதல் முறையாக வயதான கதாபாத்திரத்தில் சால்ட் & பெப்பர் லுக்கில் நடித்துள்ள விஜய் ஆண்டனி அவர்களோடு இணைந்து இறுதிச்சுற்று, ஓ மை கடவுளே பட நாயகி ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்திருக்கும் கொலை படத்தில் மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி ஷர்மா, சித்தார்த்தா ஷங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் சங்கீத் போரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த கொலை திரைப்படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில் செல்வா.ஆர்.கே படத்தொகுப்பு செய்ய, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்திருக்கிறார். ஏற்கனவே வெளியான கொலை திரைப்படத்தின் பார்த்த நியாபகம் இல்லையோ பாடல், டீசர், ட்ரெய்லர் ஆகியவை பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளன. இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் கண்டிராத வித்தியாசமான மர்டர் மிஸ்டரி ட்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள கொலை திரைப்படம் வருகிற ஜூலை 21 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் கொலை திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

கொலை திரைப்படம் உருவான விதம் குறித்து இயக்குனர் பாலாஜி கே குமார், நடிகர் விஜய் ஆண்டனி, இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன், ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயன் மற்றும் படத்தொகுப்பாளர் செல்வா.RK ஆகியோர் பேசும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. கட்டாயமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான விஷுவல் ட்ரீட்டாக வரவிருக்கும் இந்த கொலை திரைப்படத்தின் கடைசி ட்ரெய்லர் நேற்று ஜூலை 18ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெளிவந்துள்ள இந்த மேக்கிங் வீடியோவும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அந்த மேக்கிங் வீடியோ இதோ…