பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த ஃபேவரட் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என தொடர்ந்து ரசிகர்களுக்கு தன் திரைப்படங்களால் விருந்து வைக்கும் விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக தமிழ் திரை உலகில் வலம் வருகிறார். மேலும் இயக்குனராகவும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார்.

முன்னதாக விஜய் ஆன்டனியின் நடிப்பில் தமிழரசன், அக்னிச்சிறகுகள், காக்கி ஆகிய திரைப்படங்கள் நிறைவடைந்து ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், இயக்குனர் & ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் மற்றும் தமிழ் படம் பட இயக்குனர் அமுதன் இயக்கத்தில் ரத்தம் ஆகிய திரைப்படங்களும் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் விஜய் ஆண்டனி நடிப்பில் கிரைம் திரில்லர் படமாக தயாராகியுள்ளது கொலை திரைப்படம். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை இயக்குனர் பாலாஜி.K.குமார் இயக்கியுள்ளார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள கொலை படத்திற்கு செல்வா.RK படத்தொகுப்பு செய்துள்ளார்.

விஜய் ஆண்டனி உடன் இணைந்து ரித்திகா சிங் கதாநாயகியாக நடிக்க ராதிகா சரத்குமார், மீனாக்ஷ சவுத்ரி, முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் கொலை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ள கொலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…

#கொலை #హత్య pic.twitter.com/kYRkBP49Pt

— vijayantony (@vijayantony) April 6, 2022