இந்த ஆண்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் கடந்த மார்ச் 31 ம் தேதி வெளியான திரைப்படம் ‘விடுதலை’. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தில் நடிகர் சூரி முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். இவர்களுடன் இயக்குனர் கௌதம் மேனன், பவானி ஸ்ரீ, இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், பிரகாஷ் ராஜ், இளவரசு மற்றும் சேத்தன் ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். படத்திற்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பார். அட்டகாசமான பீரியட் கிரைம் திரில்லர் திரைப்படமாக வெளியான விடுதலை திரைப்படம் மக்களின் பெரும் ஆதரவை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அணைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவை பெற்று இன்னும் திரையரங்குகளில் வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கின்றனது.

இந்நிலையில் படத்தின் ஒடிடி உரிமம் பெற்ற ஜீ 5 தளமான அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தில் இடம் பெறாத காட்சிகளுடன் முழு படத்தையும் Director’s cut extended version Viduthalai என்ற பெயரில் நாளை முதல் ஜீ 5 தளத்தில் ஒளிப்பரப்பவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் இந்த பதிவினை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். விடுதலை முதல் பாகத்தில் சில காட்சிகள் மறைக்கப்பட்டும் சில காட்சிகள் நீக்கப்பட்டும் திரையிடப்பட்டது. மேலும் பொதுவாகவே இயக்குனர் வெற்றிமாறன் ஒரு படத்தை சமரசம் இல்லாமல் கதைக்கு தேவையான அளவு எடுத்து வைத்திருப்பார் படத்தின் நீளத்தை கருத்தில் கொண்டு அதை சுருக்கு வெளியிடுவது வழக்கம். அதே போல் இந்த விடுதலை திரைப்படமும் வெளியாகவிருப்பது ரசிகர்களை மேலும் உற்சாகமடைய செய்துள்ளது.

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான சில படப்பிடிப்பு மற்றும் இறுதிகட்ட வேலைகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. விடுதலை இரண்டாம் பாகம் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.