இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகிருக்கும் திரைப்படம் ‘விடுதலை’. அட்டகாசமான கதைக்களத்தை கொண்டு ரசிகர்களை கவர்ந்த விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் படத்தில் கலை இயக்குனராக பணியாற்றய ஜாக்கி அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு விடுதலை திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான பல விஷயங்களை கலந்துரையாடினார். அதில் படத்தில் இடம் பெற்று அதிகம் பேசப்பட்ட ரயில் விபத்து காட்சியின் உருவாக்கம் குறித்து கேட்கையில், அவர்.

"அந்த ரயில் விபத்து காட்சிக்காக இரண்டு பெட்டி வாங்கப்பட்டது. வாங்கியாச்சு..‌ஆனா கொண்டு வர முடியாது. அதன்பின் அதை பாதி பாதியா பிரிச்சு கொண்டு வந்து இங்கு வந்ததும் எல்லாத்தையும் சேர்த்தோம்.. மத்ததெல்லாம் நம்ம ரெடி பண்ணதுதான்.. ஒவ்வொரு ஷாட்டும் படத்தில் எனக்கு புதுசு தான். சாதரணமான தளத்தில் செட் போடுறதுக்கும் வித்யாசம் இருக்கு.. அதிகப்பட்சம் வடசென்னை படத்துல ராஜன் வீடுதான் அந்த உயரத்தில் செட் போட்டோம். ஆனா இது உயரமே வேற..

அங்கு மலைகளில் வீடுகளை செட் போட்டா கிட்டத்தட்ட மலைகளில் இருந்து 12 அடி பாதியா எடுக்கனும். அது பண்ண‌ முடியாது. சில இடங்களில் 20 அடி தெரியும். இதெல்லாம் எனக்கு சவாலா இருந்தது. “ என்றார் கலை இயக்குனர் ஜாக்கி.

மேலும் படத்தில் மற்றுமொரு அட்டமாசமான காட்சியாக வரும் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி குறித்து கலை இயக்குனர் பேசுகையில்,

“இது எல்லாம் தாண்டி அந்த வீடு மட்டும் தெரியனும். இதுக்கு என்ன பண்ணலாம் னு யோசிச்சு பண்ணோம்.க்ளைமேக்ஸ் சண்டை காட்சிகள் வீட்டு மேல் ஓடும் போது காட்சி வரும் அதில் சாதாரண ஓடு என்றால் மேலே ஏறுனதும் விழுந்துடுவாங்க..அதுக்கு ஓடு தளத்திற்கு கீழ் இன்னொரு தளம் போட்டோம் அதுக்கு மேல் தான் டம்மி ஓடு வெச்சோம். இது எல்லாம் சவாலா இருந்தது.” என்றார்

மேலும், “படப்படிப்புதளத்தில் என்னை வெற்றிமாறன் சேர்க்கவே மாட்டார். அவர் என்னுடைய உதவியாளர்களை தான் கூட வெச்சிப்பார். அங்கு என்ன நடந்தது என்பதை என் உதவியாளர்கள் என்னிடம் சொன்னால் தான் எனக்கு தெரியும் க்ளைமேக்ஸ் எடுக்கும் போது நானே அவருக்கு தெரியாமல் போனேன்.. நான் அங்கு சென்று அவரை தொல்லை செய்ய வேண்டாம்னு அவரிடம் சொல்லாமலே வந்துவிட்டேன். வெற்றிமாறன் நூறுமடங்கு உழைப்பை போட்டிருந்தார். அது பாராட்டுக்குரியது.." என்றார்.

மேலும் கலை இயக்குனர் ஜாக்கி விடுதலை படம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..