தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் வெங்கட் பிரபு தனக்கே உரித்தான பாணியில் சிறந்த என்டர்ட்டைனிங் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களின் ஃபேவரட் இயக்குனராகவும் திகழ்கிறார். முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில் (நவம்பர் 25) இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மாநாடு.

நடிகர் சிலம்பரசனின் சரியான COMEBACK திரைப்படமாக அமைந்த மாநாடு திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக S.J.சூர்யாவும் அசத்தியிருந்தார். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அவர்கள் மாநாடு படத்தை தயாரிக்க, ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில், பிரவீன்K.L. படத்தொகுப்பு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி மாநாடு திரைப்படம் மெகாஹிட் பிளாக்பஸ்டர் ஆனது.

இதனையடுத்து வெங்கட் பிரபுவின் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் மற்றும் சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் பத்தாவது திரைப்படமாக தயாராகும் #VP10 படத்திற்கு மன்மத லீலை(A Venkat Prabhu Quickie) என பெயரிடப்பட்டுள்ளது.

ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிளாக் டிக்கெட் கம்பெனி இணைந்து வழங்கும் மன்மத லீலை திரைப்படத்திற்கு தமிழ்.A.அழகன் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்ய, நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் இசை அமைக்கிறார். முன்னதாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான மன்மதலீலை படத்தின் டைட்டிலை கொண்ட இந்த மன்மதலீலை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…

From a fanboy to working with @vp_offl anna, a surreal moment for me. Presenting you the first look of #ManmadhaLeeai , a Venkat Prabhu Quickie! #VP10
Film is a blast! 😎🔥@Premgiamaren musical @Rockfortent @SamyukthaHegde @smruthi_venkat @IRiyaSuman@teamaimpr pic.twitter.com/Ddbpey52nH

— Ashok Selvan (@AshokSelvan) January 15, 2022