தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் தற்போது தனது 67வது திரைப்படமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் உருவாகும் இந்த லியோ திரைப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர்கள் கௌதம் மேனன் மற்றும் மிஸ்கின் ஆகியோரோடு பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகி வரும் லியோ படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் அனிருத் இசையமைக்க, அன்பறிவு சகோதரர்கள் ஸ்டன்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக 50 நாட்களுக்கு மேல் நடைபெற்ற லியோ திரைப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜயின் பிறந்த நாளன்று லியோ திரைப்படத்தின் அட்டகாசமான அறிவிப்பு வரும் என தயாரிப்பாளர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் ரிலீசாகி பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக அனைத்து வயது ரசிகர்களும் கொண்டாடும் திரைப்படமாக ரசிக்கப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபீஸில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

முதல்முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடபல்லி இயக்கத்தில் தளபதி விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, SJ.சூர்யா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா க்ரிஷ், VTV கணேஷ், சதீஷ், பிக்பாஸ் சம்யுகதா உள்ளிட்டோர் வாரிசு படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள வாரிசு திரைப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய, தமன்.S இசையமைத்துள்ளார். இந்நிலையில் ட்விட்டரில் #AskDilRaju என்ற HASHTAG-ல் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த தயாரிப்பு தரப்பு, “எப்போது மீண்டும் தளபதி விஜய் உடன் இணைய இருக்கிறீர்கள்? எனக் கேட்டதற்கு, "😉😉😉" என பதில் அளித்துள்ளதால், மீண்டும் இந்த வெற்றி கூட்டணி இணையும் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும், “வாரிசு திரைப்படத்தின் வெற்றி குறித்து தளபதி விஜய் என்ன சொன்னார்?” என கேட்டபோது, “அவர் வெற்றி குறித்து மிகவும் சந்தோஷப்பட்டார் மேலும் பொங்கல் வின்னர்” என தயாரிப்பு தரப்பு பதில் அளித்துள்ளது. ட்ரெண்டாகும் அந்த ட்விட்டர் பதிவுகள் இதோ…


😉😉😉#AskDilRaju https://t.co/0IQDFmSMNt

— Sri Venkateswara Creations (@SVC_official) April 5, 2023