இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான திரைப்படம் ‘வாரிசு’ இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் குடும்பங்களின் உணர்வுகளை மையாமாக கொண்டு உருவான இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க இவர்களுடன் யோகி பாபு, ஜெய சுதா, சரத் குமார், பிரபு, சங்கீதா, ஷ்யாம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஸ்ரீ வெங்கடேஷ் வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்து டிரெண்டானது குறிப்பிடதக்கது.

ரசிகர்களின் எக்கச்சக்க எதிர்பார்ப்பின் மத்தியில் கடந்த ஜனவரி 11 ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ‘வாரிசுடு’ என்ற பெயரில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வசூல் ரீதியாவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது குறிப்பிடதக்கது. மிகப்பெரிய வெற்றியுடன் தென்னிந்திய திரையுலகில் இந்த ஆண்டினை தொடங்கிய தயாரிப்பாளர் தில்ராஜு தற்போது வர்த்தக சபை தேர்தலில் வென்று தலைவராகியுள்ளார்.

தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை தலைவருக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் தில் ராஜூ ஒரு தரப்பில் தலைவர் பதிவிக்கு போட்டியிட அவருக்கு எதிராக தயாரிப்பாளர் கல்யாண் போட்டியிட்டார். தேர்தல் முடிவில் தில் ராஜுவுக்கு 48 வாக்குகளும். கல்யாணுக்கு 31 வாக்குகளும் கிடைத்தது, அதன்படி கல்யாணை விட தில் ராஜு 17 வாக்குகள் அதிகம் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவரது அணியைச் சேர்ந்தவர்கள் நிர்வாகக் குழு, தியேட்டர் ஓனர்கள், வினியோகஸ்தர்கள் ஸ்டுடியோ, தயாரிப்பாளர்கள் ஆகியவற்றில் மெஜாரிட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இந்த தேர்தலில் 1600 உறுப்பினர்களில் 1339 பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியினை தில் ராஜூ தரப்பினர் கொண்டாடி வருகின்றனர். மேலும் அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக விஜயின் வாரிசு பட ரிலீஸின் போது தெலுங்கு துறைக்கு முக்கியத்துவம் தராமல் தமிழில் உருவாகி தெலுங்கில் டப் செய்யப்பட ‘வாரசுடு’ படத்தினை அதிகம் திரையரங்குகளில் வெளியிட முயன்றார். இந்த நடவடிக்கை திரையுலகில் மிகபெரிய எதிர்ப்பினை உருவாக்கியது இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று மாஸ் காட்டியுள்ளதாக ரசிகர்கள் அவரை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

முன்னதாக தில் ராஜுவின் இணை தயாரிப்பில் உருவான சமந்தாவின் சகுந்தலம் படுதோல்வி அடைந்தது. அதை தொடர்ந்து தில் ராஜுவின் தயாரிப்பில் அடுத்ததாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ராம் சரண் நடிப்பில் ‘கேம்செஞ்சர்’ என்ற படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.