வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு மற்றும் எச் . வினோத் இயக்கத்தில் துணிவு ஆகிய படங்கள் தற்போது திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் பண்டிகை போல கொண்டாடிவருகின்றனர். பெரும் திரைகலைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்ட வாரிசு படத்தில் நடிகர் ஷியாம் விஜய்க்கு அண்ணனாக நடித்துள்ளார்.இவர் ஏற்கனவே குஷி படத்தில் விஜயுடன் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் வாரிசும் துணிவும் ஒரே நாளில் வெளிவரவிருக்கும் நிலையில் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு அவர்: "ரஜினி சார் கமல் சார் என்று பார்க்கும் பொழுது அவர்கள் இருவருமே லெஜெண்ட்ஸ் அப்படி தான் நான் உணர்கிறேன்.உதாரணத்திற்கு எ.ஆர் ரஹ்மான், மற்றும் இளையராஜா அவர்களை இப்பொழுது இருக்கின்ற இசையமைப்பாளர்களுடன் ஒப்பிட இயலாது . அவர்கள் இத்தனை வருடம் சாதித்தது இத்தனை சாதனைகளை செய்தது எல்லாம் ஈடு இணையற்றவை. அவர்கள் எல்லாம் லெஜெண்ட்ஸ் இப்பொழுது உள்ள தலைமுறையில் விஜய் மற்றும் அஜித்திற்கு மிகுந்த ரசிகர் பட்டாளம் உள்ளது. ஆகையால் யாரையும் பொதுவாக சூப்பர் ஸ்டார் என்று அழைக்க முடியாது .இதுவரை நடித்த படங்கள் மற்றும் இதற்குமேல் நடிக்க போகும் படங்கள் வைத்து அவை தீர்மானிக்கப்படுகின்றன. ரஜினியுடன் ஒப்பிடுவது சரி அல்ல. அவர் ஏற்கனவே ஒரு உயரத்தில் அமர்ந்துவிட்டார்," என்று விளக்கமளித்துள்ளார்.