தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகரான தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பக்கா கமர்சியல் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக வெளிவந்துள்ள வாரிசு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் வெளிவந்துள்ள வாரிசு படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

நேற்று ஜனவரி 14-ஆம் தேதி வாரிசு திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனான வாரசுடு திரைப்படம் வெளியாகி தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தனது தந்தையுடன் இயக்குனர் வம்சி பைடிபல்லி வாரசுடு திரைப்படத்தை பார்த்தார். படம் முடிந்து இருவரும் எமோஷனலாகி ஒருவரை ஒருவர் கட்டி தழுவி கொண்டனர்.

அந்த வீடியோவை தனது டவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குனர் வம்சி, “இன்று எனது தந்தையின் அணைப்பில் மூழ்கியது எனது மிகப்பெரிய சாதனை. இது என் வாழ்நாள் முழுக்க நினைத்து சந்தோஷப்படும் நிகழ்வு. “நீங்கள் தான் என்னுடைய ஹீரோ அப்பா!” ” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் வைரலாகும் அந்த வீடியோ இதோ…