பொங்கல் பண்டிகையடுத்து வெளியான தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் உலகெங்கிலும் வசூல் ரீதியாக சாதனை பெற்று வருகிறது. வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் குடும்ப உணர்வுகளை மையப்படுத்தி வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்களின் பேராதரவோடு பல இடங்களில் கோலாகலமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. பொங்கல் விடுமுறை என்பதால் படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை அரங்கம் நிரம்பி வழிந்தோட வாரிசு திரைப்படம் உள்ளது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் விஜயின் வாரிசு வெற்றிநடைபோட்டு கொண்டிருகிறது. மேலும் தென்னிந்திய திரைப்படங்களை வெளிநாடு வாழ் மக்கள் சமீப காலமாக அதிகம் பார்த்து வருகின்றனர் என்பதால் அதன்படி இந்தாண்டு வெளிவந்த விஜய் நடித்த வாரிசு திரைப்படம் பல நாடுகளில் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் வெளியானது. அதன் படி ஒவ்வொரு நாட்டு வினியோகஸ்தர்களும் படங்களுக்கான வசூலை அறிவித்து விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்கா நாட்டில் விஜயின் வாரிசு, வாரசுடுவை வெளியிட்ட ஷ்லோகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அமெரிக்கா பகுதிகளில் நூற்றுக் கணக்கான திரையரங்குகளில் விநியோகிஸ்தது. அதன்பின் படம் நல்ல வரவேற்பை அங்கு பெற்ற நிலையில் தற்போது வாரிசு மற்றும் வாரசுடு திரைப்படம் வட அமெரிக்கா பகுதிகளில் 1.2 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது ஷ்லோகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம். இதனடிப்படையில் 2023 ம் ஆண்டின் அமெரிக்க பகுதிகளில் 1 மில்லியன் டாலர் வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை அடைகிறது தளபதி விஜயின் வாரிசு. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் ஷ்லோகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பதிவை வைரலாக்கி வருகின்றனர்.

பொதுவாகவே விஜய் படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிப்பதும் அவருடைய முந்தைய வசூல் சாதனையை அவரது அடுத்த படம் முறியடிப்பதும் என்ற வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதே நேரத்தில் உள்நாட்டு வசூல்களில் போட்டி போட்ட விஜய் படங்கள் தற்போது வெளிநாடு பகுதிகளில் போட்டி போட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் தயாரிப்பில் வெளிவந்த வாரிசு படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் தற்போது ஒலித்துக் கொண்டிருக்கின்றது. விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெய சுதா, ஷ்யாம்,சங்கீதா,சம்யுக்தா, பிரகாஷ்ராஜ் சதீஷ், விடி வி கணேஷ், உள்ளிட்டோ இப்படத்தில் நடித்துள்ளனர்