லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. மணிரத்தினம் இயக்கத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் படத்தில் நடித்த நடிகர்கள் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, திர்ஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, அஷ்வின், சரத் குமார், லால், பார்த்திபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் விழா நாயகர்களான மணி ரத்னம் , ஏ ஆர் ரகுமான் அவர்களுடன் படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் சிறப்பு விருந்தினராக உலகநாயகன் கமல் ஹாசன் , சிலம்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் படத்தில் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் கார்த்தி அவர்கள் ரசிகர்களில் ஆரவாரத்துடன் பேசியது,

"மணிரத்தினம் சார் வெறும் ஆசையோடு வந்த என்னை எந்த கேள்வியும் கேட்காமல் சேர்த்துக் கொண்டார். தமிழ் படங்களில் இதுவரை ரிலீஸ் ஆகாத ஊர்களின் தியேட்டர்களில் எல்லாம் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது நான் கைதி படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது அவரிடம் இருந்து அழைப்பு வந்தது வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கிறாயா என்றார், நான் சிவாஜி கணேசன் வசனங்கள் எல்லாம் பேசி நடித்துக் காட்டினேன்.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சார், கமல் சார் பேசினார்கள், அது இப்போது தான் புரிகிறது மணிரத்னம் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும். முன்னதாக பையா திரைப்படத்திற்கு எனக்கு நிறைய காதல் கடிதங்கள் வந்தது.அதன்பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு சமூக வலைதளங்களில் எனக்கு நிறைய மெசேஜ் வருகிறது என்றார்." என பேசினார் நடிகர் கார்த்தி.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் அதிகம் பேசப்பட்ட கதாபாத்திரம் கார்த்தி நடித்த வந்திய தேவன். புரட்சி தலைவர் எம் ஜி ஆர் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று பேசப்பட்ட கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். நிச்சயம் இரண்டாம் பாகத்திலும் கார்த்தி வந்தியதேவனாய் ரசிகர்களின் மனதை மீண்டும் ஆள்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.