தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வலிமை. சதுரங்க வேட்டை. தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை படங்களை இயக்கிய இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்து வெளிவந்த வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த வலிமை திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திக்கேயா நடித்திருந்தார். கார்த்திக்கேயாவின் மிடுக்கான தோற்றமும் நடிப்பும் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்ததாக கார்த்திக்கேயா தெலுங்கில் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் முக்கியமான அப்டேட் தற்போது வெளியானது.

நடிகர் கார்த்திக்கேயாவின் 9வது திரைப்படமான இப்படத்தை இயக்குனர் கிளாக்ஸ் எழுதி இயக்குகிறார். லவ்கியா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்திர பேனர்ஜி முப்பனேணி தயாரிப்பில் கலகலப்பான நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் கார்த்திக்கேயாவுக்கு ஜோடியாக நடிகை நேஹா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.

முன்னணி இசையமைப்பாளர் மணிஷர்மா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் கார்த்திக்கேயாவின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படபூஜை புகைப்படங்கள் இதோ…

A FUNtastic entertainer shoot begins 🥳

Our #ProductionNo3 ⚡ing @ActorKartikeya & @iamnehashetty launched today with pooja💥

🎥 ON by Kartikeya's wife #Lohitha
🎬 by @vamsi84
📒 given by @BuchiBabuSana

A #ManiSharma Musical 🎶#Kartikeya9 #Clax @Benny_Muppaneni pic.twitter.com/it5jE7GdPm

— Loukya entertainments (@Loukyaoffl) April 22, 2022