நடிகர் நிதின் சத்யாவின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் வைபவ் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஹீரோயினாக பிரபல சீரியல் நடிகை வாணி போஜன் ஒப்பந்தமாகியுள்ளார். SG சார்லஸ் இந்த படத்தை இயக்குகிறார்.

ஈஸ்வரி ராவ்,பூர்ணா என்கிற ஷாம்னா காசிம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் வைபவ் போலீசாக நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் டைட்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த படத்தின் டைட்டில் லாக்கப் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த டைட்டிலை இயக்குனர் மோகன் ராஜா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Happy to Launch The Title Look Poster of Dear @Nitinsathyaa ‘s Production No 2 #Lockup

Best wishes to my former associate @SGCharles2 & Team 👍
@shvedhgroup @actor_vaibhav @vp_offl bro @vanibhojanoffl @shamna_kasim #EswariRao @ArrolCorelli @editor_mad @teamaimpr @kbsriram16 pic.twitter.com/XPA1sSRFDM

— Mohan Raja (@jayam_mohanraja) October 31, 2019