திரையரங்குகளில் படம் பார்த்த காலம் ஒடிடியில் படம் பார்க்கும் காலம் என்று பொழுதுபோக்கு பிரிவை தற்போது இரண்டு பிரிவுகளாக பிரித்து விட முடியும். மேல்நாட்டில் ஒடிடி தளங்களில் புழக்கம் வழக்கமானதாக இருந்தாலும் கொரொனோ காலத்திற்கு பின் இந்தியாவிலும் பரவலாக பயன்படுத்த படுகிறது.

அதன்படி முன்னணி நடிகர்களின் படங்களும் நேரடியாக ஒடிடி தளங்களுக்கு வர தொடங்கியுள்ளது. மேலும் ஒடிடி தளங்கள் பயன்பாட்டும் அதிகளவு பெருகி விட்டது. இந்நிலையில் எந்தவொரு விதிகளும் இல்லாமல் நேரடியாக ஒடிடியில் வெளியாகும் திரைப்படங்களை தற்போது கண்காணித்து அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற சுகாதார துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

திரையரங்குகளில் படங்கள் வெளியாவதற்கு முன்னதாக தணிக்கை சான்றிதழ் பெறுவது வழக்கம் அதனை பெற பல்வேறு விதிகள் தற்போது அமலில் உள்ளது. அதில் முக்கியமானதாக புகைப்பிடித்தல், மதுபானங்கள் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்தும் காட்சிகள் படத்தில் இடம் பெற்றால் அந்த காட்சி இடம் பெரும் இடத்தில் புகையிலை குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற வேண்டும். இந்த விதி திரைப்படம் துவங்கும் போதும் காட்சிகள் இடம் பெறும்போதும் ஒத்து போகும்.ஆனால் ஒடிடியில் நேரடியாக வெளியாகும் படங்கள், இணைய தொடர்களுக்கு இது அவசியம் இல்லை. இந்த விதிகளை தாண்டியே இதுவரை ஒடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் ஒடிடி தளங்களில் இனி வெளியாகும் திரைப்படங்கள் இணைய தொடர்களில் புகைப்பிடித்தல். போதை பொருட்கள் பயன்படுத்தும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் கட்டாயம் இடம் பெறவேண்டும். மேலும் தொடர் தொடங்கும் முன் 30 வினாடிகள் ஓடக்கூடிய புகையிலை எச்சரிக்கை காணொளி இடம் பெறவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த முடிவை தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக்கு பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி மே 31, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி. ஒடிடி போன்ற இணைய உள்ளடக்கங்களை வெளியிடுபவர்கள் இந்த புதிய விதிகளை பின்பற்றி செயல்பட வேண்டும். மீறினால் மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தகவல் ஒளிப்பரப்பு அமைச்சகம் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து மத்திய சுகாதரா துறை அமைச்சகம் மற்றும் தகவல் ஒளிப்பரப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.