இயக்குனர் ஷங்கர் படங்களில் கதை, திரைக்கதை, பட வடிவமைப்பு போன்ற பல விஷயங்களில் மக்கள் கொண்டாடும் அளவு கொடுப்பது வழக்கம். இந்த பிரிவுகளில் மிக முக்கியமானவை சண்டை வடிவமைப்பு. முதல் படத்திலிருந்தே சண்டை காட்சிகளை கச்சிதமாக கொடுத்து பார்வையாளர்களை வியக்க வைக்க மெனக்கெடுவார் இயக்குனர் ஷங்கர். அதன்படி முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன், ஐ மற்றும் பல படங்களில் சண்டை காட்சிகள் வேறு ஒரு தளத்தில் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அந்த விஷயத்தில் ஷங்கர் ஒரு போதும் குறை வைத்ததில்லை. அதன்படி தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் இந்தியன் 2.

1996 ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி வருகிறது. இதில் உலகநாயகன் கமல் ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் இணைந்து காஜல் அகர்வால். சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் படத்திற்கு திரைக்கதை எழுதி வருகிறார்கள் எழுத்தாளர் ஜெயமோகன், கவிஞர் கபிலன் வைரமுத்து, லக்ஷ்மி சரவணகுமார். மேலும் ஒளிப்பதிவு செய்கிறார் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்.

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ள இந்தியன் 2 படக்குழு முழு வீச்சுடன் படத்தை எடுத்து வருகின்றனர். ஆந்திர மற்றும் தமிழ் நாடு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கமல் ஹாசன் வெளிநாட்டு சண்டை பயிற்சி குழுவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இப்படத்திற்கு பீட்டர் ஹெயின் சண்டை வடிவமைப்பு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கமல் ஹாசன் புகைப்படம் இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் உலகெங்கிலும் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.