தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக பிரபல நடிகராகவும் திகழ்ந்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது தமிழக சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். தொடரந்து உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படங்கள் அடுத்தடுத்து வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே, இயக்குனர் K.S.அதியமான் இயக்கத்தில் ஏஞ்சல் மற்றும் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கும் புதிய திரைப்படம் என உதயநிதி நடித்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வருகிற மே 20-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

கனா படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் , இயக்கத்தில் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க, ஆரி அர்ஜுனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சிவாங்கி, இளவரசு, மயில்சாமி, ரமேஷ் திலக், சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, திபு நினன் தோமஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் சென்சார் குறித்த தகவல்கள் வெளியாகின. நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் மொத்த ரன் டைம் 139 நிமிடங்கள் ஆகும். மேலும் சென்சாரில் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அந்த சென்சார் சான்றிதழ் இதோ…