தமிழ் திரையுலகில் சூப்பர் ஹிட் பாடல்களை எழுதிய பாடலாசிரியராக, குறிப்பிடப்படும் பாடகராக, பிரபல நடிகராக, வளர்ந்து வரும் நல்ல இயக்குனராக என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருகிறார் அருண்ராஜா காமராஜ். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் முதல் படமாக வெளிவந்த திரைப்படம் கனா.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் & சத்யராஜ் இணைந்து நடித்து வெளிவந்த கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து பாலிவுட்டில் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகிவரும் நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கியுள்ளார் அருண்ராஜா காமராஜ்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதய நிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க, ஆரி அர்ஜுனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ZEE ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க, ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடும் நெஞ்சுக்கு நீதி படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானது. இதனைத்தொடர்ந்து விரைவில் படத்தின் டீசர், ட்ரைலர், பாடல்கள் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#NenjukkuNeedhi Shooting Completed. Dubbing commenced.@ZeeStudios_ @BayViewProjOffl @BoneyKapoor #RomeoPictures @mynameisraahul @Udhaystalin @Arunrajakamaraj @actortanya @Aariarujunan @dineshkrishnanb @dhibuofficial @AntonyLRuben @zeemusicsouth @DoneChannel1 @teamaimpr pic.twitter.com/GVv9hUJ8Uh

— BayViewProjectsLLP (@BayViewProjOffl) December 18, 2021