கடின உழைப்பினால் வளர்ந்து தனக்கே உரித்தான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்து இன்று தமிழ் திரையுலகில் சிறந்த் என்டர்டேயினராக வலம் வருகிறார். இவரது டாக்டர், டான் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் பாக்ஸ் ஆபிஸ் ஸ்டாராகவும் வளர்ந்துள்ளார். அதையடுத்து அவரது நடிப்பில் இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் R.ரவிசங்கர் இயக்கத்தில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் ‘அயலான்’ திரைப்படம், மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் SK21, இதனையடுத்து இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களோடு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் இணைய இருப்பதாக தெரிகிறது.

இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் மாவீரன். தமிழ் திரையுலகில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பின் மத்தியில் நாளை வெளியாகவிருக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருகிறார். இப்படத்தை ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிதுள்ளார். மேலும் படத்தில் சரிதா, யோகி பாபு, தெலுங்கு நடிகர் சுனில், மோனிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என தயாராகும் மாவீரன் திரைப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிடவுள்ளது. மேலும் தமிழ் மட்டுமல்லாமல் நாளை மகாவீரடு என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியாகவிருக்கும் மாவீரன் திரைப்படத்தின் முன்பதிவு ஒரு புறம் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்க அதே நேரத்தில் படக்குழு படத்திற்கான விளம்பர வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் மாவீரன் படத்தின் தமிழ்நாடு வினியோகஸ்தகர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாவீரன் படத்தை சமீபத்தில் பார்த்துள்ளார். படம் பார்த்த அவர் மாவீரன் திரைப்படத்தின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

நம்ம வீட்டு பிள்ளை. டான் படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சிவகார்த்திகேயனுடன் இணையும் மூன்றாவது திரைப்படம் மாவீரன். முன்னதாக வெளியான இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸ் அளவில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் என்பதும் அந்த வரிசையில் தற்போது மாவீரன் திரைப்படமும் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.