துப்பறிவாளன் படத்தின் வெற்றியை அடுத்து மிஷ்கின் இயக்கியுள்ள படம் சைக்கோ.உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.அதிதி ராவ் ஹைதாரி,நித்யா மேனன் இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.டபுள் மீனிங் ப்ரோடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் ஒப்பந்தமானார் ஆனால் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த படத்தில் இருந்து விலகினார்.

இதனை அடுத்து இவரது உதவியாளரான தன்வீர் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.தற்போது இந்த படத்தில் தன்வீரின் வேலை பலரிடமும் பாராட்டு பெரும் இந்த படத்தின் 99% வேலைகளை தன்வீர் செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

pic.twitter.com/5WR9wDXGNK

— pcsreeram (@pcsreeram) September 9, 2019