தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக அவதரித்து அசத்தி வருபவர் உதயநிதி ஸ்டாலின்.அரசியல் குடும்பத்தில் பிறந்த இவர் அரசியலிலும் தனது முத்திரையை பதித்து 2021-ல் நடைபெற்ற தேர்தலில் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று MLA-வாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடிப்பில் கடைசியாக சைக்கோ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கடந்த சில வருடங்களாக அரசியலில் செம பிஸியாக இருந்தாலும் படங்களில் நடிப்பதையும் தொடர்ந்து செய்து வந்தார் உதயநிதி ஸ்டாலின்.இதனை தொடர்ந்து நெஞ்சுக்கு நீதி,கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார் உதயநிதி ஸ்டாலின்.

இவர் அடுத்ததாக பரியேறும் பெருமாள்,கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.ஏ.ஆர் ரஹ்மான்இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

பஹத் ஃபாசில்,வைகைப்புயல் வடிவேலு இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் இரண்டுக்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்திருந்தது.தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது என்ற பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது.இன்று ஷூட்டிங் முடிந்த கையோடு வடிவேலுவின் பிறந்தநாளையும் படக்குழுவினர் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடியுள்ளனர்.விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

It's a wrap for @Udhaystalin ’s Maamannan by @mari_selvaraj. @KeerthyOfficial , #FahadhFaasil and others also celebrated Tamil comedy legend #Vadivelu's birthday on the film's sets.@RedGiantMovies_ @arrahman #FahadhFaasil @thenieswar @MShenbagamoort3 pic.twitter.com/pD2tLe3Dhl

— Galatta Media (@galattadotcom) September 12, 2022