96, பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து கர்ஜனை, பரமபதம் விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். எங்கேயும் எப்போதும் புகழ் இயக்குனர் சரவணன் இயக்கும் ராங்கி படத்தில் நடிக்கவிருக்கிறார் த்ரிஷா. லைக்கா தயாரிக்கும் இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கிறார்.

படக்குழுவினர் உஸ்பகிஸ்தான் சென்றனர். படத்தின் முக்கிய காட்சிகளை அங்கு படமாக்கினர் என்ற செய்தி சமீபத்தில் தெரியவந்தது. ஐந்து நாள் கொண்ட படப்பிடிப்பு மீதம் உள்ளதாக இயக்குனர் சரவணன் தெரிவித்தார். போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் முழுமூச்சில் நடைபெற்று வருகிறது.

படத்தில் த்ரிஷா Third Eye மீடியா நிறுவனத்தின் CEO வாக நடிக்கவுள்ளாராம் என்ற தகவல் சமீபத்தில் தெரியவந்தது. விரைவில் படம் பற்றிய அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. த்ரிஷா கைவசம் கர்ஜனை, பரமபதம் விளையாட்டு போன்ற படங்கள் உள்ளது.