தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவ்ரன. தமிழில் ‘வாகை சூடவா’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் முதல் படத்திலே மிகபெரிய அளவு கவனத்தை ஈர்த்து தமிழ் சினிமாவில் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவரானார். அதன்பின் வத்திக்குச்சி, குட்டி புலி, திருமணம் எனும் நிக்கா,அமரகாவியம் போன்ற படங்களில் பணியாற்றி ரசிகர்களின் வரவேற்பை பெற்று முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரானார். அவர் இசையில் உத்தம வில்லன், பாபநாசம், தீரன் அதிகாரம் ஒன்று, விஸ்வரூபம் 2, ராட்சசன் ஆகிய படங்கள் மிகப்பெரிய பெயரை அவருக்கு பெற்று தந்தது. பின் தொடர்ந்து தமிழ், தெலுங்கு கன்னடா, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இசையமைத்து வந்தார். சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘துணிவு’ திரைப்படத்திற்கு இசையமைத்து ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான். தற்போது அவர், இறைவனுக்கு அருள்வாய், மோகன்தாஸ், கொற்றவை, இயல்வது கறவேல் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

தமிழில் ரசிகர்களை படத்திற்கு படம் ஆச்சர்யம் அளித்து வரும் இசையமைப்பாளர் ஜிப்ரான் தற்போது ட்விட்டர் கணக்கிலிருந்து விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டவை, “ நான் எனது சொந்த வேலைகளுக்கு முன்னுரிமைகளை வழங்கவுள்ளேன். அதற்காக ட்விட்டரில் இருந்து ஒய்வு எடுக்கிறேன். ஓரிரு நாட்களில் எனது ட்விட்டர் கணக்கு தனிபட்ட அமைப்பில் மாற்றப்படும். எதிர்காலத்தில் எந்தவொரு விஷத்திற்கும் இந்த கணக்கை தனிப்பட்ட முறையில் பயன்படுத்த உள்ளேன். உங்கள் புரிதலுக்கு நன்றி.. உங்கள் அனைவருக்கும் நிறைய அன்பை கொடுக்கின்றேன்.. நன்றி” என்று தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து ரசிகர்கள் அவரது முடிவை புரிந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நேற்று ட்விட்டர் நிறுவனம் மாத சந்தா செலுத்தாத ட்விட்டர் கணக்குகளில் இருந்து ப்ளு டிக் நீக்கவுள்ளோம் என்று அறிவிப்பை வெளியிட்டது. அதையடுத்து ரஜினிகாந்த், விஜய், ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட பல திரைபிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், முக்கியமான பிரபலங்களின் கணக்குகளில் இருந்து ப்ளு டிக் நீக்கப்பட்டது. இதில் ஜிப்ரான் கணக்கும் இடம் பெற்றுள்ளது. ட்விட்டரின் இந்த அதிரடி முடிவினால் பிரகாஷ் ராஜ், பாடகி சின்மயி உட்பட பலர் தங்கள் ப்ளு டிக் விடை கொடுத்து அதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் ட்விட்டரில் இருந்து விலகியதும் இதில் ரசிகர்கள் மத்தியில் செய்தியாக வேகமாக பரவி வருகிறது.