ஆரவாரமாக துவங்கிய ஜூன் மாதம் நிதானமாக முடிவடைந்துள்ளது. அதன்படி இந்த மாதம் வெளியான டக்கர், போர் தொழில், பொம்மை, ஆதிபுருஷ், தண்டட்டி, அஸ்வின்ஸ், வேட்டையாடு விளையாடு ஆகிய திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று கவனம் பெற்றது. அட்டகாசமான அப்டேடுகளுடன் ஜூன் மாதம் நிரம்பி வழிந்தாலும் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படம் வெளியானது மிக குறைவு. அதன்படி ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஒடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் எதிர்பார்ப்பு சற்று உயர்ந்துள்ளது. அத்தகைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்று வெளியான திரைப்படங்களின் பட்டியல் இதோ..

திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்

மாமன்னன்

ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் நேற்று (ஜூன் 29) இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’ உதயநிதி ஸ்டாலின் , வடிவேலு, ஃபகத் ஃபாஸில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைபாடத்திற்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவினை அளித்து வருகின்றனர்.

இண்டியானா ஜோன்ஸ்

உலக புகழ் பெற்ற ஸ்டீபன் ஸ்பீல்பர்க் இயக்கத்தில் 90 களின் காலக் கட்டத்தை திரில்லர் அட்வேன்டரில் நிரப்பிய இண்டியானா ஜோன்ஸ் திரைப்படம் தற்போது புது வடிவில் இயக்குனர் ஜேம்ஸ்மேன்கோல்ட் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. அட்வேன்ட்சர் நாயகன் ஹாரிசன் போர்ட் மீண்டும் உலகநாயகனாக மாறியிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது ஆதரவினை வழங்கி வருகின்றனர்.

ஒடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்

வீரன்

நடிகர்கள் – ஹிப் ஹாப் ஆதி, வினய், ஆதிரா ராஜ்

இயக்குனர் – ARK சரவணன்

தளம் – அமேசான் பிரைம் (ஜூன் 30)

குட் நைட்

நடிகர்கள் – கே மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக்

இயக்குனர் – வினய்க் சந்திரசேகர்

தளம் – டிஸ்னி ஹாட்ஸ்டார் (ஜூலை 3)

குலசாமி

நடிகர்கள் – விமல், தான்யா ஹோப்

இயக்குனர் – சரவணன் சக்தி

தளம் – டெண்ட் கொட்டா (ஜூன் 30)

விமானம்

நடிகர்கள் – சமுத்திரகனி, மீரா ஜாஸ்மின்

இயக்குனர் – சிவா பிரசாத் யான்லா

தளம் – ஜீ 5 (ஜூன் 30)

லஸ்ட் ஸ்டோரிஸ் சீசன் 2

நடிகர்கள் – தமன்னா. கஜோல், விஜய் வர்மா, மிருனாள் தாகூர்

இயக்குனர்கள் – கொன்கொனா சென், சுஜாய் கோஷ், பால்கி, அமித் ஷர்மா

தளம் – நெட்பிளிக்ஸ் (ஜூன் 29)

பாஸ்ட் எக்ஸ்

நடிகர்கள் – வின் டீசல், ஜேசன் மோமோ, ப்ரீ லார்சன்

தளம் – BMS