இந்தியாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரானவர் தளபதி விஜய். மாஸ் கமர்ஷியல் படங்களின் மூலம் பல தாசப்தங்களாக ரசிகர்களுக்கு விருந்தளித்து வருபவர் தளபதி விஜய். பாக்ஸ் ஆபீஸ் வசூல்களை படத்திற்கு படம் சாதனை படைத்து தற்போது அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்துள்ளார். தற்போது அவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் லியோ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஷால் அவர்கள் விஜய் அவர்களை நேரில் சந்தித்து உள்ளார்.

நடிகர் விஷால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தின் டீசர் காட்சியை தளபதி விஜய் பார்த்துள்ளார். இதனை மகிழ்ச்சியாக அந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் விஷால் பகிர்ந்து அதனுடன், “என்னுடைய சகோதரன் மற்றும் ஹீரோவான விஜய் அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.. எனது படத்தின் முன்னோட்டத்தை பார்த்தது நன்றி. உங்களது ரசிகராக இருப்பதில் எனக்கு எப்போதும் பெருமை.. என்று குறிப்பிட்டுள்ளார்.

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பகீரா ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களின் அடுத்த திரைப்படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’ இப்படத்தில் நடிகர் விஷாலுடன் இணைந்து நடிகர் எஸ் ஜே சூர்யா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் தெலுங்கு நடிகர் சுனில், இயக்குனர் செல்வராகவன், ரெடின் கிங்க்ஸ்லி, ரித்து வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மார்க் ஆண்டனி திரைப்படம் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் பிரம்மாண்டமாக ஒரு SciFi திரைப்படமாக உருவாக வாய்ப்புள்ளது என்பதனை வித்யாசமான கெட்டப்பில் நடிகர்களின் போஸ்டர் வெளியீடு தெரிவிக்கின்றது.

இப்படத்தின் டீசர் இணையத்தில் இன்று மாலை 6.30 மணியளவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையே நடிகர் விஷால் தளபதி விஜய் அவர்களை சந்தித்து மார்க் ஆண்டனி படத்தின் டீசரை காட்டி தனது மகிழ்ச்சியை தெரிவித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.