எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த 2023ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக தளபதி விஜயின் வாரிசு மற்றும் அஜித்குமாரின் துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடந்த ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகின. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக தளபதி விஜயின் வாரிசு படமும், ஆக்ஷன் என்டர்டெய்னராக அஜித்குமாரின் துணிவு படமும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுகின்றன.

முதல்முறையாக முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் முன்னணி இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, ஜெயசுதா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், இளைய திலகம் பிரபு, யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த், சங்கீதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்துள்ள வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் வாரிசு திரைப்படத்தின் வெற்றிக்காக ரசிகர்களுக்கும் ஊடக துறையினருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் இன்று ஜனவரி 16ஆம் தேதி வாரிசு நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

அந்த வகையில் மேடையில் பேசிய இயக்குனர் வம்சி பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, "படம் தொடங்கிய சமயத்தில் இருந்து இறுதி வரை தளபதி விஜய் அவர்கள் என்னிடம் நீங்கள் "HAPPY-ஆ" என்று கேட்டுக் கொண்டே இருப்பார். தற்போது படம் ரிலீஸாகிவிட்டது. இப்போது வாரிசு படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் அவரை சந்தித்தபோது முதல் முறையாக நான் அவரிடம் கேட்டேன் சார் நீங்க HAPPY-ஆ என்று கேட்டேன் அவர் VERY HAPPY என பதிலளித்தார். எனக்கு அது போதும்" என இயக்குனர் வம்சி தெரிவித்துள்ளார். வாரிசு படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் சந்திப்பின் முழு வீடியோ இதோ…