தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராகவும் வசூல் சக்கரவர்த்தியாகவும் திகழும் தளபதி விஜய் தற்போது , கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் திரைப்படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, யோகிபாபு, அபர்ணா தாஸ், VTV கணேஷ் ஆகியோருடன் இணைந்து மிரட்டலான வில்லனாக இயக்குனர் செல்வராகவன் நடித்து வருகிறார்.

ப்ளாக் காமெடி ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்திற்கு முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஸ்டன்ட் இயக்குனர்களாக அன்பறிவு பணியாற்றி வருகின்றனர்.தளபதியின் மாஸ்டர் மற்றும் நெல்சனின் டாக்டர் படங்களுக்கு இசையமைத்த ராக்ஸ்டார் அனிருத் பீஸ்ட் படத்திற்கும் இசையமைக்கிறார்.

பரபரப்பாக முழுவீச்சில் நடைபெற்று வரும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு 100 நாட்களை எட்டியுள்ள நிலையில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பீஸ்ட் படப்பிடிப்பின்போது தளபதி விஜய், பூஜா ஹெக்டே, ரெட்டின் கிங்ஸ்லி, VTV கணேஷ் உள்ளிட்ட பலர் இருக்கும் புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பக்கா ஸ்டைலாக தளபதி விஜய் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அந்த புகைப்படம் இதோ...

It’s “100th day of shooting”
100 days of fun with these amazing people #Beast ❤️ @actorvijay @hegdepooja @sunpictures pic.twitter.com/kgspauE8CL

— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) November 28, 2021